ஆன்மிகம்
பொங்கல் விழா
48ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர், 3 வது வீதி, திருப்பூர். வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு - இரவு, 7:00 மணி.
கும்பாபிேஷகம்
ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ மிருத்சங்கிரஹணம், வேள்விச்சாலை அழகு பெற செய்து துாய்மை செய்தல் - காலை, 9:00 மணி. திருக்குடங்களில் திருவருட் சக்தி ஏற்றுதல் - மாலை, 6:00 மணி. முதல் கால யாக பூஜை - இரவு, 7:00 மணி. பேரொளி வழிபாடு, மலர் போற்றுதல், திருமுறை விண்ணப்பம் - இரவு 9:00 மணி.
தைப்பூசத் தேர்த்திருவிழா
ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். மஞ்சள் நீர் உற்சவம் - காலை, 9:00 மணி.
மண்டல அபிேஷக பூஜை
ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
யோக ம ேஹாத்சவம்
எளிமையான யோகா மற்றும் தியானப் பயிற்சி, பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் எதிரில், பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.
n குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி. அவிநாசி. மாலை, 5:30 மணி.
n ஸ்ரீ கணபதி கோவில் திருமண மண்டபம், விஜயாபுரம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.
புத்தக கண்காட்சி
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கண்காட்சி - காலை, 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை. 'மக்களின் மனம் கவர பாடியவர்களில் விஞ்சி நிற்பவர் பட்டுக்கோட்டையாரே, கண்ணதாசனே, வாலியே, வைரமுத்துவே' எனும் தலைப்பில் இன்னிசை பாட்டு அரங்கம், பத்மநாதன் குழு இசை - மாலை, 6:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி.