ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை துவக்கம், 108 மூலிகை பொருட்கள் ஆகுதி நிறை பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் - காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை. பரிவார தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் - 10:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை துவக்கம் - மாலை, 6:00 மணி முதல்.
பொங்கல் விழா
48ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர், 3வது வீதி, திருப்பூர். வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்துகரும்பு படைக்கலம் கொண்டு வருதல் - இரவு, 7:00 மணி.
மண்டல அபிேஷக பூஜை
ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
n பொது n
மறியல் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. காலை, 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு. மாலை, 5:00 மணி.
யோக மேஹாத்சவம்
யோகா மற்றும் தியானப் பயிற்சி, பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் எதிரில், பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். பங்கேற்பு: பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன். மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.
புத்தக கண்காட்சி
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கண்காட்சி - காலை, 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை. பங்கேற்பு - மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு. திறனாய்வுப் போட்டி பரிசளிப்பு விழா - மாலை, 6:00 மணி.