தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 03, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடு

பத்தாம் வகுப்பு பொது த்தேர்வெழுதும் மாணவ, மாணவியருக்காக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டர் அறக்கட்டளை. சிறப்பு வேள்வி - காலை, 9:00 மணி. மூலவர் திருமஞ்சனம் - 10:30 மணி. நாம சங்கீர்த்தனம் - 11:00 மணி. சாற்றுமுறை மற்றும் மகா தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

n சிறப்பு ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை, விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

பைரவர் பூஜை

தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை, ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். 16 வகை திரவியங்களால் அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை, 5:00 மணி.

n கைலாசநாதர் கோவில், அலகுமலை. தேய்பிறை அஷ்டமி பூஜை - மாலை, 5:00 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

கடன் வழங்கும் முகாம்

வீடு, வாகன கடன் வழங்கும் முகாம், காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: யூனியன் பேங்க் ஆப் இந்தியா. காலை, 10:30 மணி.

கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

n ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருமுருக நாதசுவாமி அறக்கட்டளை, சுகன் சுகா மருத்துவமனை. காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

துவக்க விழா

மனவளக்கலை மன்றம் துவக்க விழா, வஞ்சிபாளையம் ரோட்டரி டிரஸ்ட் ஹால், முருகம்பாளையம், கணியாம்பூண்டி. காலை, 9:30 மணி.

மகளிர் நல ஆலோசனை முகாம்

மகப்பேறு கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல ஆலோசனை முகாம், மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர், மருத்துவமனை வளாகம், முத்து செட்டிபாளையம் மெயின் ரோடு, அவிநாசி. காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

கருத்தரங்கம்

'விடுதலை வேள்வியில் தமிழகம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், ஏ.வி.பி., லே-அவுட் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகம், அவிநாசி ரோடு, காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: வாசகர் சிந்தனை பேரவை. மாலை, 4:00 மணி.

டைமண்ட் மேளா

நகை கண்காட்சி, கே.ஆர்.பி.எஸ்., ஜூவல்லரி, முனிசிபல் ஆபீஸ் வீதி, பிக் பஜார் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

பொதுக்கூட்டம்

'எல்லோருக்கும் எல்லாமும்' தலைப்பில் நிதிநிலை அறிக்கை விளக்கம், முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அம்மன் வீதி, வெள்ளகோவில். அண்ணா சிலை அருகில், தாராபுரம். ஏற்பாடு: தெற்கு மாவட்ட தி.மு.க., மாலை, 6:00 மணி.

நிட்-டெக் கண்காட்சி

பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, ைஹடெக் திருப்பூர் கண்காட்சி வளாகம், ரிங்ரோடு, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 மணி.

தியான பயிற்சி

தியான மையம் துவக்க விழா, பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் இல்லம், நாரணாபுரம் ரோடு, வெட்டுப்பட்டான் குட்டை, பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ். மாலை, 4:00 மணி.

n ஜீவா காலனி திருமண மண்டபம், அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ். 'உறவுகள் மேம்படவும், நம்மை உள்முகமாக கவனிக்கவும், தியானத்தின் பங்கு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:30 மணி. பயிற்சி -மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us