தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மார் 10, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

வீரக்குமார சுவாமி கோவில், வெள்ளகோவில். திருத்தேர் நிலை சேர்தல், சுவாமி தேர்க்கால் பவனி - மாலை, 4:00 மணி. ஈரோடு ஹர்ணி ஆர்க்கெஸ்ட்ரா, இன்னிசை நிகழ்ச்சி - இரவு, 9:00 மணி.

அமாவாசை பூஜை

சிறப்பு பூஜை, சுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், திருப்பூர். காலை, 8:00 மணி.

 கருப்பராயன், கன்னிமார், முனியப்பன், தன்னாசியப்பன் கோவில், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. மதியம், 3:00 மணி.

சிவராத்திரி திருவிழா

அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி - காலை, 7:00 மணி. பாகை விளையாடுதல், அம்மன் வரலாற்றை பாட்டுடன் எடுத்துரைத்தல் - இரவு, 7:00 மணி.

குண்டம் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், காந்திபுரம், அவிநாசி. குண்டம் இறங்குதல், காலை 9:00 மணி, இரவு ரிஷப வாகன காட்சி -இரவு, 7:00 மணி.

திருமுறை முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

 பொது 

புத்தக கண்காட்சி

'தினமலர்' வாரமலர்' அந்துமணியின் அனைத்து நுால்கள் மற்றும் மணிமேகலை பிரசுர ஆசிரியர்களின் நுால்கள் அறிமுக விழா மற்றும் கண்காட்சி, ஓட்டல் பார்ச்சூன் பார்க், 2வது தளம், 15 வேலம்பாளையம் ரிங் ரோடு, பெரியார் காலனி, திருப்பூர். ஏற்பாடு: பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் நிறுவனம், திருப்பூர் முத்தமிழ் சங்கம், மணிமேகலை பிரசுரம். காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

மகளிர் தின விழா

'பெண்கள் மற்றும் ஆரோக்கியம்' எனும் தலைப்பில் மகளிர் தின விழா, யோகாஸ்ரமம், சகஜபுரம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட். காலை, 7:30 முதல், மதியம், 1:30 மணி வரை.

அளவீடு முகாம்

செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை, 9:00 மணி.

பொது மருத்துவ முகாம்

 இதயம், எலும்பு, சிறுநீரகம், பெண்களுக்கான சிகிச்சை, கண், பொது அறுவை சிகிச்சை முகாம், மைக்ரோ கிட்ஸ் மேல்நிலைப்பள்ளி, கணியாம்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: குமரன் மருத்துவமனை, ஐ பவுண்டேசன், கணியாம்பூண்டி வளர்ச்சிக் குழு. காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை.

 திருப்பூர் தொழிலாளர் கூட்டுறவு திருமண மண்டபம், ஜீவா காலனி, திருப்பூர். ஏற்பாடு: கேபிள் டிவி ஆபரேட்டர் பொது நலச்சங்கம் மற்றும் ஸ்ரீகுமரன் மருத்துவமனை, திருப்பூர். காலை, 8:00 முதல், மதியம், 2:00 மணி வரை.

முப்பெரும் விழா

பள்ளி ஆண்டு விழா, 'விசயலக்குமி' நினைவு விருது மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, தாய் தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், வெள்ளியங்காடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.

நுால் வெளியீட்டு விழா

பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு, நுால் வெளியீடு, மக்கள் மாமன்ற நுாலகம், டைமண்ட் தியேட்டர் அருகில், திருப்பூர். ஏற்பாடு: மக்கள் மாமன்றம். காலை, 10:00 மணி.

சிறப்பிதழ் வெளியீடு

மகளிர் தின சிறப்பிதழ் வெளியீடு, ருக்மணி அம்மாள் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பதியம் இலக்கிய அமைப்பு. காலை, 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us