தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மார் 12, 2024 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பூச்சாட்டு விழா

தேர்த்திருவிழா பூச்சாட்டுதல், மாரியம்மன் கோவில், கருவலுார். பூச்சாட்டு விழா - காலை, 9:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ தன்னாசியப்பன், ஸ்ரீ மதுரை வீரன் கோவில், அசநல்லிபாளையம், வேட்டுவபாளையம், அவிநாசி. தீர்த்தம் கொண்டு வருவல் - மதியம் 12:00 மணி.

சிவராத்திரி விழா

அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாவிளக்கு அம்மன் பவனி வருதல் - காலை 7:00 மணி. அம்மன் குதிரை வாகனத்தில் பவனி, பரிவேட்டை - மாலை 4:00 மணி.

குண்டம் திருவிழா

அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. மஞ்சள் நீர் உற்சவம் - காலை 10:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை 8:00 மணி, மதியம் 12:00 மணி. மாலை 4:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

n பொது n

ஜெயந்தி விழா

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 189 ஜெயந்தி விழா, ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், சன்னதி வீதி, திருமுருகன்பூண்டி. காலை 10:00 மணி. ஸ்ரீ சாரதா தேவியார் தண்ணீர் பந்தல் திறப்பு விழா - 10:30 மணி.

போராட்டம்

போதை பொருள் புழக்கம், விற்பனையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம், கோல்டன் நகர் மெயின் ரோடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை, 7:30 மணி.

n புதிய பஸ் ஸ்டாண்ட் முன், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி தொகுதி அ.தி.மு.க., காலை 9:30 மணி.

ஒருங்கிணைப்பு கூட்டம்

வடமாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம், அம்மன் திருமண மண்டபம், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ., பிறமொழி பிரிவு. காலை, 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us