sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடாத ஊஞ்சல்; ஏமாந்த குட்டீஸ்

/

ஆடாத ஊஞ்சல்; ஏமாந்த குட்டீஸ்

ஆடாத ஊஞ்சல்; ஏமாந்த குட்டீஸ்

ஆடாத ஊஞ்சல்; ஏமாந்த குட்டீஸ்


ADDED : மார் 03, 2024 11:49 PM

Google News

ADDED : மார் 03, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகாதாரச் சீர்கேடு

திருப்பூர், 38வது வார்டு, கண்ணன் காட்டேஜ் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ளுவதில்லை; சுகாதாரக்கேடு ஏற்படுகிறது; குப்பை அள்ள வேண்டும்.

- நட்ராஜ், ஆண்டிபாளையம். (படம் உண்டு)

அகலுமா ஆக்கிரமிப்பு?

திருப்பூர், 18வது வார்டு, வ.உ.சி., நகர் ஐந்தாவது வீதியில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றி விட்டு, சாலை அமைக்க வேண்டும்.

- ரஞ்சித், வ.உ.சி., நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், தாராபுரம் ரோடு, மண் பானை கடை வீதி அருகே அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- பாபுதரண், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

பணி மந்தம்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பொது குடிநீர் குழாய் எதிரே சாலை அகலப்படுத்தும் பணி மந்தமாக நடக்கிறது. தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது.

- நாகராஜன், பாளையக்காடு. (படம் உண்டு)

தண்ணீர் வீண்

திருப்பூர், 58வது வார்டு, தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம்,

மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டில் கால்வாய் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.

- பாலு, மகாலட்சுமி நகர். (படம் உண்டு)

கழிவுநீர் தேக்கம்

திருப்பூர், பி.என்., ரோடு, பழனிசாமி நகரில் கால்வாய் உடைந்த நிலையில் உள்ளது. மழை பெய்யும் போது கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது.

- கோகுல், பழனிசாமி நகர். (படம் உண்டு)

உடைந்த ஊஞ்சல்

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட், வடக்கு உழவர் சந்தை பின்புறம் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள் உடைந்துள்ளன. அங்கு செல்லும் குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)

உறிஞ்சுகுழி வீண்

சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, மூன்றாவது வார்டு, குளத்துப்பாளையம் மழைநீர் சேகரிப்புக்கு அமைக்கப்பட்ட உறிஞ்சுகுழி புதர்மண்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

- சோழவன், குளத்துப்பாளையம். (படம் உண்டு)

மூடாத குழி

திருப்பூர் முதல் மண்டல அலுவலகம் அருகே, காந்தி ரோட்டில் குழாய் பதிக்க தோண்டிய குழியை பணி முடிந்தும் மூடவில்லை. 25 நாட்களாக அப்படியே உள்ளது. யாரேனும் தவறி விழுந்து விட வாய்ப்புள்ளது.

- பிரபாகர், காந்தி ரோடு. (படம் உண்டு)

ரியாக் ஷன்

சீரானது உடைப்பு

திருப்பூர், 32வது வார்டு, கோல்டன் நகர் மெயின் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்ட பின், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

- சங்கர்சதீஷ், கோல்டன் நகர். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us