/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும்! 'பி.எல்.ஐ., - 2.0' கருத்தரங்கில் நம்பிக்கை
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும்! 'பி.எல்.ஐ., - 2.0' கருத்தரங்கில் நம்பிக்கை
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும்! 'பி.எல்.ஐ., - 2.0' கருத்தரங்கில் நம்பிக்கை
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும்! 'பி.எல்.ஐ., - 2.0' கருத்தரங்கில் நம்பிக்கை
ADDED : நவ 26, 2025 07:01 AM
திருப்பூர்: ''செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் முன்னணி நாடாக உயர்த்தும் வகையில், பி..எல்.ஐ., -2..0' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் பேசினார்.
கோவை டெக்ஸ்டைல் கமிட்டி சார்பில், உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டம் (பி.எல்.ஐ.,) திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு, ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
ஜவுளி அமைச்சகத்தின் உதவி செயலாளர் திரு பாஸ்கர் கல்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பி.எல்.ஐ., -2.0 திட்டம் குறித்து பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர், ராஜ்குமார் பேசியதாவது:
உலகளாவிய செயற்கை நுாலிழை உற்பத்தியில், அதிக பங்கெடுக்கும் வகையில், மத்திய அரசு சிறப்பு திட்டம் அறிவித்துள்ளது. உள்நாட்டில், செய்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளர்ச்சி பெற்றிருந்தாலும், சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி பங்களிப்பு குறைவாக உள்ளது. இத்தகைய சவால்களை தீர்க்க, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியின் முன்னணி நாடாக மாற்றப்பட வேண்டும்.
அதற்காகவே, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் எளிதாக்கப்பட்டுள்ளது. ஏராளமான சந்தை வாய்ப்புகளும் உள்ளன. அதிக பயன்பாடு கொண்ட, தனித்துவமான உயர்ந்த நன்மை தரும் ஆடைத் தயாரிப்பு களை உருவாக்க முடியும். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு, பி.எல்.ஐ., -2.0 திட்டம் முக்கிய திருப்பத்தை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செயற்கை நுாலிழை தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தென் பிராந்திய இயக்குநர் ஜான் ஆனந்த் ராஜா, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சுனில்குமார் உட்பட பலர் பேசினர்.

