/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று தைப்பூசத் தேரோட்டம்; முருகன் கோவில்கள் கோலாகலம்
/
இன்று தைப்பூசத் தேரோட்டம்; முருகன் கோவில்கள் கோலாகலம்
இன்று தைப்பூசத் தேரோட்டம்; முருகன் கோவில்கள் கோலாகலம்
இன்று தைப்பூசத் தேரோட்டம்; முருகன் கோவில்கள் கோலாகலம்
ADDED : பிப் 10, 2025 11:44 PM
திருப்பூர்; மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடக்கிறது.
தைப்பூசத்தையொட்டி, மாவட்டத்தில், சிவன்மலை சுப்ரமணியர், ஊத்துக்குளி கதித்தமலை, மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி, கொங்கணகிரி கந்தப் பெருமான், விராலிக்காடு சென்னியாண்டவர் கடந்த ஒரு வாரமாக சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இன்று தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பொங்கலுார் ஒன்றியம், அலகுமலையிலுள்ள குழந்தை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்றிரவு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை, உற்சமூர்த்தி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை தேரோட்டம் நடக்கிறது.
l ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவிலில், இன்று அடிவாரத்திலும், 14ம் தேதி மலை மீதும் தேரோட்டம் நடக்கிறது. நேற்று மாலை, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, 11ம் தேதி காலை, உற்சவமூர்த்திகள் அடிவாரத்தில் உள்ள தேரில் எழுந்தருள்கின்றனர்; திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும்.
l சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு உற்சவர் எழுந்தருளியுள்ளார். நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் எழுந்தருளினார். இன்று தேர் வடம்பிடித்து தேரோட்டம் நடக்கிறது.
l கருமத்தம்பட்டி, விராலிக்காடு சென்னி யாண்டவர் கோவிலில், நேற்று மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. யானை வாகனத்தில் திருவீதியுலா வந்தார். இன்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
l மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, சுவாமி தேருக்கு எழுந்தருளல், மாலை, 3:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. வரும், 12ம் தேதி பரிவேட்டை; 13ம் தேதி மகாதரிசனம்; 14ம் தேதி மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமி சன்னதி, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலிலுள்ள ஸ்ரீசண்முகநாதர் சன்னதி, திருப்பூர் - வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்ரமண்ய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும், இன்று அபிேஷகம், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை ஆகியன நடக்கின்றன.