ADDED : அக் 18, 2024 06:41 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது.
சில மாதங்களாக, துணை கமிஷனர் ஹர்சினி, கூடுதல் பொறுப்பாக இப்பணிகளை மேற்கொண்டு வந்தார். புதிய உதவி கமிஷனராக தனசேகர் நியமிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றார். வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கண்காணிப்பாளராக இருந்த அவர், பதவி உயர்வு பெற்றுள்ளார்.
