ADDED : பிப் 22, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், உலகத் தாய்மொழி தினக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பேராசிரியர் செங்கமுத்து வரவேற்றார். துறைத் தலைவர் பாலசுப்ர மணியம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் 'மொழிகளின் சிதைவு' என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மலேசியா விவேக பசுமை நடுவம் இயக்குனர் கண்ணன் 'வேர்கொண்டு விண்ணெழுதல்' எனும் தலைப்பில் பேசினார்.
பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி (பொருளியல்), மோகன்குமார் (விலங்கியல்) உள்ளிட்டோர்பங்கேற்றனர். உதவி பேராசிரியர் மகேஸ்வரி ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் சகாயராணி நன்றி கூறினார்.