தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாதுகாப்பு நடவடிக்கை எடுங்க... காரணம்பேட்டை மக்கள் மனு

பாதுகாப்பு நடவடிக்கை எடுங்க... காரணம்பேட்டை மக்கள் மனு

பாதுகாப்பு நடவடிக்கை எடுங்க... காரணம்பேட்டை மக்கள் மனு


UPDATED : நவ 17, 2026 08:52 PM

ADDED : நவ 17, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 08:52 PM ADDED : நவ 17, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: காரணம்பேட்டை பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனு:

காரணம்பேட்டை பகுதியில், கோவை- – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அன்னுார், - பொள்ளாச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் இணைகிறது. பல்வேறு காரணங்களால், இப்பகுதியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

விநாயகர் கோவில் முதல் வி.ஏ.ஓ., அலுவலகம் வரை, தேசிய நெடுஞ்சாலையில் மைய தடுப்பு விளக்குகள் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கோதிபாளையம் பிரிவு, பெருமாள் கவுண்டம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில், நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த இடங்களில், எச்சரிக்கை விளக்கு, வேகத்தடை அமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு, கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us