/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுங்க! கலெக்டர் - அமைச்சரிடம் மக்கள் முறையீடு
/
கழிவுநீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுங்க! கலெக்டர் - அமைச்சரிடம் மக்கள் முறையீடு
கழிவுநீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுங்க! கலெக்டர் - அமைச்சரிடம் மக்கள் முறையீடு
கழிவுநீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லுங்க! கலெக்டர் - அமைச்சரிடம் மக்கள் முறையீடு
ADDED : நவ 05, 2025 12:17 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 48வது வார்டு, ஜெ.எஸ். கார்டன் மற்றும் அமர்ஜோதி கார்டன் பகுதி பொதுமக்கள், அமைச்சர் சாமிநாதன் மற்றும் கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்து, சாக்கடை கால்வாயை மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி நேற்று மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் - காங்கயம் ரோடு, ஜெ.எஸ். கார்டன், அமர்ஜோதி கார்டன் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நல்லுார் நகரின் தென்மேற்கு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் செவந்தாம்பாளையம் பகுதியிலிருந்து வரும் மொத்த கழிவுநீரும், கடந்த மூன்று ஆண்டுகளாக, எங்கள் குடியிருப்புகளுக்கு பின் உள்ள தனியார் ஓட்டலுக்கு செந்தமான இடத்தில், தேங்கிவருகிறது. இதனால், குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீரை கொண்டு வரவேண்டாம் என, மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால், எங்கள் வீதி வழியாகவே கழிவுநீரை கொண்டு செல்லும் வகையில், தற்போது சாக்கடை கால்வாய் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கழிவுநீரை, நல்லுார் வரை, காங்கயம் மெயின் ரோட்டிலேயே கொண்டு செல்ல முடியும். ஆனாலும், குடியிருப்பு பகுதி வழியே கொண்டு செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் கட்டுவது கவலை அளிக்கிறது.
நல்லுாரின் தென் மேற்கு பகுதியிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாக்கடை கால்வாயில் பெருக்கெடுத்து, பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடும், நோய் பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை, மாற்றுப்பாதையில், காங்கயம் ரோடு வழியாக அமைக்கும் வகையில், திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

