/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாலுகா அலுவலக நுழைவாயில் 'வாஸ்து சரியில்லை' என அடைப்பு?
/
தாலுகா அலுவலக நுழைவாயில் 'வாஸ்து சரியில்லை' என அடைப்பு?
தாலுகா அலுவலக நுழைவாயில் 'வாஸ்து சரியில்லை' என அடைப்பு?
தாலுகா அலுவலக நுழைவாயில் 'வாஸ்து சரியில்லை' என அடைப்பு?
ADDED : அக் 01, 2024 12:09 AM
திருப்பூர் : திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பிரதான நுழைவாயில் கதவுகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், சரவணன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பிரதான நுழைவாயில், தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதனால் வாஸ்து சரியில்லை என, அந்த நுழைவாயில் கதவுகளை இழுத்துமூடி விட்டனர். பின்பகுதியில் சிறிய நுழைவாயில் அமைத்து, பயன்படுத்திவருகின்றனர்.
இதனால், தாலுகா அலுவலகத்துக்கு வருவோர், கூடுதலாக 500 மீட்டர் துாரம் சுற்றவேண்டியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தாலுகா அலுவலக பிரதான நுழைவாயிலை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.