ADDED : நவ 21, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊதியூர், நிழலி கிராமத்தில் கடந்த, 17 ஆண்டுக்கு முன், 53 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை, இதுவரை அளவீடு செய்யாமல் இருப்பதை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., செயலாளர் சுப்ரமணியன் தலைமையில் பொதுமக்கள் காங்கயம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் மோகனன் பேச்சு நடத்தினார்.
அதில், வரும், 27ம் தேதி அந்த இடத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

