/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளத்தில் மூழ்கிய 'தமிழ்'; ஆங்கிலத்தில் தகவல் பலகையால் அதிருப்தி
/
ஆண்டிபாளையம் குளத்தில் மூழ்கிய 'தமிழ்'; ஆங்கிலத்தில் தகவல் பலகையால் அதிருப்தி
ஆண்டிபாளையம் குளத்தில் மூழ்கிய 'தமிழ்'; ஆங்கிலத்தில் தகவல் பலகையால் அதிருப்தி
ஆண்டிபாளையம் குளத்தில் மூழ்கிய 'தமிழ்'; ஆங்கிலத்தில் தகவல் பலகையால் அதிருப்தி
ADDED : ஏப் 23, 2025 07:00 AM

திருப்பூர் : 'படகுக்குழாம்' என்ற வார்த்தை தவிர, வேறு எந்த தகவலும், தமிழ்மொழியில் இல்லையென, ஆண்டிபாளையம் குளத்துக்கு செல்லும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி எல்லையில், பொதுப்பணித்துறை பராமரித்து வந்த, ஆண்டிபாளையம் குளத்தில் பூங்கா அமைத்து, மக்கள் பயன்படுத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து பராமரித்து வந்தது. தற்போது, சுற்றுலாத்துறை மூலமாக, படகு இல்லம் அமைத்து, குளத்தில் படகு சவாரி செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு வசதியில்லாத திருப்பூரில், படகு சவாரி பூங்கா அமைத்தது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி, சுற்றுலாத்துறையுடன் இணைந்து படகுத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தில், படகுத்துறை தொடர்பான தகவல்கள், படகு சவாரி அதற்கான கட்டணம் ஆகிய விவரங்கள் அணைத்தும், ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
'படகுக்குழாம்' என்ற ஒரு வார்த்தையை தவிர, தமிழ்மொழியில் வேறு எந்த அறிவிப்பும் இல்லை. அனைத்து தகவல் பலகை மற்றும் அறிவிப்பு பலகைகளும், ஆங்கிலத்திலேய வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டுமென, தமிழ்வளர்ச்சித்துறை மூலமாக, கடைகள், ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகின்றனர். ஆனால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டிய ஆண்டிபாளையம் படகுத்துறையில், தமிழ்மொழியில் ஒரு வார்த்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
அனைத்து தகவல் பலகையும், ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. கட்டணமும் மிக அதிகாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாப நோக்கம் பார்க்காமல், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பாமர மக்களும் படித்து தெரிந்துகொள்ளும் வகையில், தமிழில், அனைத்து அறிவிப்பு பலகைகளையும் வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

