ADDED : டிச 09, 2024 04:43 AM

திருப்பூர் : சிலப்பதிகாரம் முற்றோதல் செய்த, விருதுநகர், சுப்பையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி வீரச்செல்வி, பத்தாம் வகுப்பு மாணவி வேணி ஆகியோருக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, தாய்த்தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு, தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூரில் நேற்று நடந்தது.
திருமுருகநாத சுவாமி திருமடம் சுந்தரராச அடிகளார், பாண்டியன் நகர் தாய்த்தமிழ் பள்ளி தாளாளர் மருத்துவர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காலண்டிதழ், புதுமலர் ஆசிரியர் கண.குறிஞ்சி பேசுகையில், 'உலகில் எத்தனை மொழிகள் பேசினாலும் தமிழ் மொழி தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி,' என்றார்.
சிலப்பதிகாரம் முற்றோதிய அரசு பள்ளி மாணவியர் வீரச்செல்வி, வேணி இருவருக்கு, பெற்றோர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.