/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உணவுப்படி உயர்த்தாத தமிழக அரசு'; இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

ADDED : ஆக 25, 2025 10:13 PM
திருப்பூர்; 'உணவுப்படியை உயர்த்தி வழங்காமல், அரசு விடுதி மாணவர்களை, தமிழக அரசு வஞ்சித்து வருகிறது,'' என, இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய மாணவர் சங்க, 27வது மாநில மாநாடு, திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது.
உணவுப்படியை உயர்த்தி வழங்காமல், தமிழக அரசு விடுதி மாணவர்களை வஞ்சித்து வருகிறது. பள்ளி மாணவருக்கு, மாதம், 2,500 ரூபாயும், கல்லுாரி மாணவருக்கு, மாதம், 3,000 ரூபாயும் உணவுப் படியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு இலவச விடுதி வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி அளவில், மாணவர் மன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவராக பெண் நியமனம் மாநில தலைவராக மிருதுளா, பொதுச்செயலாளராக சம்சீர் அகமது உட்பட, 83 பேர் கொண்ட மாநில குழு தேர்வு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். மாநில தலைவராக பெண் நிர்வாகியை நியமிப்பது இதுவே முதன்முறை என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.