/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் 'தமிழரண்' கருத்தரங்கம்
/
சிக்கண்ணா கல்லுாரியில் 'தமிழரண்' கருத்தரங்கம்
ADDED : செப் 02, 2025 11:05 PM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் தமிழரண் மாணவர் அமைப்பு இணைந்து, கருத்தரங்கு நடத்தின.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார். கவிஞர் விஜயராஜ், வரவேற்றார். கருத்தரங்கில், தமிழக பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி, அமைப்பாளர் மங்கைநம்பி, பொருளியல் துறை தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் பேசினர்.
உலக நாடுகளில் அவரவர் தாய் மொழியின் வளர்ச்சியும், தமிழகத்தில் தாய்மொழியின் வளர்ச்சி, நான் விரும்பும் தமிழகம் என்ற தலைப்புகளில் மாணவர்கள் பேசினர்.
முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தவள்ளி, மாணவர் நித்தீஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். தமிழ்த்துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.