/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடுரோட்டில் பழுதாகும் 'டஞ்சன்' பஸ்கள்
/
நடுரோட்டில் பழுதாகும் 'டஞ்சன்' பஸ்கள்
ADDED : ஆக 13, 2025 01:11 AM

பல்லடம்; அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் அன்றாடம் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடம் அருகே பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கூறியதாவது:
பல்லடம் -- திருப்பூருக்கு இடையே, ஆறுமுத்தாம்பாளையத்தில் இருந்து, 30 மற்றும் 30ஏ ஆகிய இரண்டு அரசு பஸ்களை பயன்படுத்தி, பல்லடம் மற்றும் திருப்பூருக்கு பலரும் சென்று வருகின்றனர்.
அடிக்கடி இந்த பஸ்கள் பழுதாவதால், சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கின்றனர். மங்கலம் ரோடு, திருப்பூர் ரோட்டுக்கு இடையே ஆறுமுத்தாம்பாளையம் கிராமம் அமைந்துள்ளதால், இப்பகுதிக்கு மாற்று பஸ் வசதி கிடையாது. பஸ்கள் பழுதானால், சின்னக்கரை வரை, 6 கி.மீ., நடந்து சென்று பஸ்சில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
இது, மாணவர்கள், தொழிலாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்குவதுடன், இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.