/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்கத்தை 'சுட்ட' தனிஷ்கா ஆசிய 'ஷாட் கன்' போட்டியில் அபாரம்
/
தங்கத்தை 'சுட்ட' தனிஷ்கா ஆசிய 'ஷாட் கன்' போட்டியில் அபாரம்
தங்கத்தை 'சுட்ட' தனிஷ்கா ஆசிய 'ஷாட் கன்' போட்டியில் அபாரம்
தங்கத்தை 'சுட்ட' தனிஷ்கா ஆசிய 'ஷாட் கன்' போட்டியில் அபாரம்
ADDED : செப் 07, 2025 02:38 AM

''இந்தியாவின் பிரதிநிதியாக, என் நாட்டிற்காக விளையாடி வெற்றி பெறுவது, பெரிய மரியாதை; இது வெறும் ஆரம்பம் தான்'' என்கிறார், ஆசிய சாம்பியன்ஷிப் 'ஷாட்கன்' துப்பாக்கி சுடுதல் போட்டியில், 3 தங்கப்பதக்கம் வென்ற, திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த தனிஸ்கா.
கஜகஸ்தான், ைஷம்கெனட் பகுதியில், 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில், 27 நாடுகளைச் சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 'ஷாட்கன்' பிரிவில், 'டிராப்' இளையோர் தனி பிரிவில் தங்கம் வென்றார் தனிஷ்கா. இளையோர் பெண்கள் அணி பிரிவில் தங்கம்; கலப்பு ஜோடி பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அவரை துப்பாக்கி சுடுதலில் ஊக்குவித்து, பயிற்சி வழங்கி வரும் அவரது தந்தை செந்தில்குமார் கூறியதாவது;
நான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாநில, தேசிய போட்டியில் பங்கெடுத்திருக்கிறேன். வெள்ளகோவிலில், பயிற்சி மையம் வைத்துள்ளேன். அதனால், என் மகளுக்கும் துப்பாக்கி சுடுதலில், குறிப்பாக, 'ஷாட் கன்' பிரிவில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. கடந்த, 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். திறந்த வெளியில் பறக்கும் தட்டை குறி பார்த்து சுடும் இந்த விளையாட்டு, சவாலானது.தனிஸ்காவின் ஆர்வம், விடா முயற்சி, பயிற்சியின் விளைவாக, இருமுறை தமிழக அணியில் இடம் பிடித்து, தேசிய போட்டியில் பங்கேற்று, பதக்கம் பெற்றிருக்கிறார். கடந்தாண்டு, 'கேலோ' இந்தியா போட்டியில் தனிநபர் பிரிவில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.வரும், 20ம் தேதி டில்லியில் துவங்கவுள்ள உலக கோப்பை 'ஷாட் கன்' போட்டியில் பங்கெடுக்க உள்ளார். இப்போட்டியில், இந்தியாவில் இருந்து, 5 பேர் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனர்; அதில், தனிஸ்காவும் ஒருவர். அவர் படித்த பிளாட்டோஸ் பள்ளி நிர்வாகமும், தற்போது பயின்று வரும் பி.எஸ்.ஜி., கல்லுாரி நிர்வாகத்தினரும் ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினர்.