/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாராபுரம் நகர சாலைகள் ரூ.2 கோடியில் புதுப்பிப்பு
/
தாராபுரம் நகர சாலைகள் ரூ.2 கோடியில் புதுப்பிப்பு
ADDED : மே 29, 2025 12:52 AM
தாராபுரம் ;தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 4.66 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
தாராபுரம், வளையல்கார நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; 36.28 லட்சம் ரூபாய் மதிப்பில், 9வது வார்டு, சூளைமேட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.08 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலைகளை புதுப்பிக்கும் பணி, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி என, 4.66 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்றுள்ளன.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், இப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்து, புதிய பணிகளையும் துவக்கி வைத்தனர்.தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புக்கண்ணன், கமிஷனர் சரவணக்குமார், பொறியாளர் சுமதி, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.