/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
260 கோடி மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு: தன்னார்வலர், விவசாயிகளுடன் கைகோர்ப்பு
/
260 கோடி மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு: தன்னார்வலர், விவசாயிகளுடன் கைகோர்ப்பு
260 கோடி மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு: தன்னார்வலர், விவசாயிகளுடன் கைகோர்ப்பு
260 கோடி மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு: தன்னார்வலர், விவசாயிகளுடன் கைகோர்ப்பு
ADDED : பிப் 11, 2024 01:39 AM
திருப்பூர்:'பசுமை தமிழகம்' திட்டத்தின் கீழ் 260 கோடி மரக்கன்றுகளை வளர்க்க, தன்னார்வ அமைப்பினர், விவசாயிகளுடன் அரசுத்துறைகள் கைகோர்க்கின்றன.
'பசுமை தமிழகம்' திட்டத்தில், தமிழகத்தில், 10 ஆண்டுகளில், 260 கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, அரசு முடிவெடுத்துள்ளது. வனத்துறை சார்பில் இப்பணி முன்னெடுக்கப்பட்டாலும், வேளாண், தோட்டக்கலை துறையினர், தன்னார்வ மற்றும் இயற்கை அமைப்பினரையும் இணைத்து இப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மாவட்ட வாரியாக, வனத்துறை உட்பட இத்திட்டத்தில் இணைந்து செயல்பட இருக்கிற துறைகள், தன்னார்வ அமைப்பினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பான திட்ட அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில், திருப்பூரில் நட்டு பராமரிக்கப்படும் சவுக்கு பண்ணையை, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ''பசுமை தமிழகம் திட்டத்தில், பல கோடி மரங்களை காப்புக்காடுகளில் மட்டும் நட்டு வளர்ப்பது கடினம். விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, அவர்களது தோட்டங்களில், பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்.
திட்டத்தில் இணைந்து செயலாற்ற உள்ள பல்வேறு அரசு துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு, வனத்துறையில் உள்ள பல்வேறு திட்டங்களின் கீழ், மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது,'' என்றார்.