ADDED : ஏப் 29, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மே தினத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மே 1ம் தேதி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும், மதுக்கடைகள் (எப்.எல்.1), அவற்றுடன் சேர்ந்து இயங்கும் பார்கள், மனமகிழ் மன்றங்கள் (எப்.எல்.2) மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகள் (எப்.எல்.3) ஆகியவை மூடப்பட வேண்டும்; மதுபான விற்பனையும் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், தொடர்புடைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
