ADDED : மார் 22, 2025 06:46 AM
திருப்பூர், : திருப்பூரில், 12 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறிய, டெய்லருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர், செரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம், 45. பனியன் நிறுவனம் ஒன்றில், டெய்லராக வேலை பார்க்கிறார். இவர் கடந்த, 2022 ஆக., மாதம், 12 வயது சிறுமியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தெற்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, பிரகாசத்தை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு திருப்பூர், விரைவு மகிளா கோர்ட்டில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் பிரகாசத்துக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமிலாபானு ஆஜரானார்.