/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டீ பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா
/
டீ பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா
ADDED : டிச 25, 2025 05:55 AM

திருப்பூர்: அவிநாசி, பழங்கரையில், உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஏர்னெஸ்ட் அகாடமி சி.பி.எஸ்.இ. ஆகியன இணைந்து விளையாட்டு தினம் கொண்டாடப் பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு விளையாட்டு மேலாண்மை நிர்வாகி, முன்னாள் மாணவர் நவீன் சிவக்குமார் மற்றும் இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன் ஆகியோர் புறாக்களை பறக்க விட்டு நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தனர்.
முதலில் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை வண்ண அணிகளின் அணிவகுப்பு நடந்தது. மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்ற சாதனையாளர்களால் பள்ளி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் உற்சாகப்படுத்தின.
வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. இருதரப்பிலும் சிவப்பு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

