sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் பயிற்சி

/

 ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் பயிற்சி

 ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் பயிற்சி

 ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் பயிற்சி


ADDED : மார் 20, 2026 04:58 AM

Google News

ADDED : மார் 20, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கோர்ட் உத்தரவுப்படி தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் பயிற்சி குறித்து விளக்கினார்.

நிர்வாகிகள் கூறுகையில், 'தினமும் சரியாக மாலை 6:00 மணிக்கு பயிற்சி துவங்கும். இதில் மொத்தம் 120 வகுப்புகள் பாடவாரியாக நடைபெறும். கல்வி வல்லுனர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பயிற்சியில் இணையலாம். ஜூம் மீட்டில் இணைய ஐடி '858 8074 9922'. கடவு எண் 1234. மேலும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் யூ டியுப் சேனலிலும் இணையலாம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us