/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவியை ஆசிரியர் கண்டித்ததால் பரபரப்பு
/
அரசு பள்ளி மாணவியை ஆசிரியர் கண்டித்ததால் பரபரப்பு
ADDED : பிப் 05, 2025 11:12 PM
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவியை ஆசிரியர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, அப்பள்ளி ஆசிரியர் கடுமையாக கண்டித்து விட்டதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அருள்ஜோதி பள்ளியில் விசாரணை நடத்தினார். மேலும், பள்ளியின் சார்பில் பெற்றோரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
தாராபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்ஜோதி கூறுகையில், ''பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதால், மாணவியை தயார்படுத்துவதற்கும், தேர்ச்சி பெற செய்வதற்கும் ஆசிரியர் கண்டித்ததாக பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இனி இதுபோன்ற சம்பவம் நிகழாது எனவும் ஆசிரியர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோரும் அதை ஏற்றுக்கொண்டதாக கடிதம் வழங்கி விட்டனர்'' என்றார்.