/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முகாம்
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : மே 30, 2025 01:37 AM

திருப்பூர்,; காங்கயம், விவேகானந்தா அகாடமி, சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 28 மற்றும், 29 இருநாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது; 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு விவேகானந்தா அகாடமி நிர்வாக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சென்னை, சி.பி.எஸ்.இ., திறன் வளர்ப்பு பயிற்சி மையம் ஷாலினி நாயர், ஸ்ரீ மதிநாயுடு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி கல்வி நிபுணர்கள் பங்கேற்று, பள்ளி ஆசிரியர்களுக்கு 'அனுபவ கற்றல்' எனும் தலைப்பில் பயிற்சியளித்தனர்.
முன்னதாக, 'ஆசிரியரின் கடமை பண்பு, வகுப்பு மேலாண்மை, தொழில்நுட்பத்துடன் கற்பித்தல், குழு மனப்பான்மை போன்ற துறைகளில் தேவையான திறன்கள் பற்றியும் புதுமையான கல்வி நுட்பங்கள், மாணவர்களின் மன நலனில் கவனம் செலுத்துதல், கற்றல் முறைகளை எளிதாக்குதல்' உள்ளிட்ட தலைப்புகள் பயிற்சி முகாமில் விவாதிக்கப்பட்டது.