/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் பணியிடம் காலி கல்வித்தரம் பாதிக்கும்
/
ஆசிரியர் பணியிடம் காலி கல்வித்தரம் பாதிக்கும்
ADDED : ஜூன் 02, 2025 06:18 AM
திருப்பூர்: மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடத்துடன் தற்போது ஓய்வு பெறுபவர்கள் காலி பணியிடமும் இணைவதால், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிப்பளு ஏற்படும்.
கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே மாணவ, மாணவியர் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அதிக மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில், மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ளபணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் குழு மூலம் நிரப்ப தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விரைவில்நிரப்பப்படும்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து கூறுகையில், 'பள்ளி கல்வித்துறை இயக்குனரின் வழிகாட்டுதல் பின்பற்றி, காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முழு கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் இப்பணியிடங்களை நிரப்பி கல்விப்பணியை தொடர வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்பட்டு விட்டதா என்பது குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும்,' என்றார்.