/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா பள்ளியில் ஆசிரியர் தின விழா
/
விவேகானந்தா பள்ளியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 05, 2025 11:41 PM

திருப்பூர்:
முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் சாந்தா வரவேற்றார். தாளாளர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், ''ஆசிரியப்பணி அறப்பணி; மாணவ, மாணவியர் ஒழுக்கம், பண்பு, நன்னடத்தையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.செயலாளர் சக்திவேல், ஆசிரியர்களின் முக்கியத்துவம் மற்றும் நற்பண்புகளை விளக்கி பேசினார்.
கல்லுாரியின் முதல்வர் தீபா, 'ஆசிரியர் என்பவர் யார்? கற்பித்தலில் உள்ள உளவியல்முறைகள், ஆசிரியர்களின் பாட செயல்பாடுகள், மாணவர் திறன்களை செம்மைப்படுத்தி வளர்க்க வேண்டிய வழிமுறைகள்' குறித்து பேசினார்.
பள்ளி ஆசிரியர்களுக்கு, விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயல் இயக்குனர் அசோக்குமார், நவா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் நிர்மலா தேவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் நடராஜ் நன்றி கூறினார்.