ADDED : செப் 08, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், எஸ்.கே.பி கல்வி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கல்விக்கழக இணை செயலாளர் கோபாலன் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பொருளாளர் நாககுமார் பல்வேறு கல்வியாளர்களின் சாதனைகள் குறித்து பேசினார்.
பள்ளி முன்னாள் மாணவர் உடுமலை வருவாய்த்துறை துணை தாசில்தார் தினேஷ்ராகவன், ஆசிரியர்களின் பெருமை குறித்து பேசினார். ஆசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.