ADDED : ஜூன் 29, 2026 04:06 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் திருப்பூரில் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்தது.
பொதுச்செயலாளர் முருகேசன், செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி இணை அமைப்பாளர் சாந்தி வரவேற்றார்.
பொருளாளர் சிவகுமார் ஆண்டு நிதிநிலை அறிக்கையை வாசித்தார். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு; பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
