ADDED : ஜன 31, 2026 04:46 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலரை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி, தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் குமரன் ரோட்டில், வடக்கு வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. நேற்று மாலை இங்கு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர் சங்கத்தினர் நுாற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
வட்டார தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் வட்டார கல்வி அலுவலர் பூபாலனை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், திரளான ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
