/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணி பாதுகாப்பு வழங்க ஆசிரியர்கள் போராட்டம்
/
பணி பாதுகாப்பு வழங்க ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஏப் 05, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமான விகாஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி முன்பு நேற்று நடந்தது.
மாநில துணை தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், செயலாளர் செல்வகுமார், அரசு உதவி பெறும் பள்ளி செயலாளர் கணேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.