/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேர்வுப்பணியில் ஆசிரியர்களுக்கு பதட்டம், அவசரம் கூடாது'
/
'தேர்வுப்பணியில் ஆசிரியர்களுக்கு பதட்டம், அவசரம் கூடாது'
'தேர்வுப்பணியில் ஆசிரியர்களுக்கு பதட்டம், அவசரம் கூடாது'
'தேர்வுப்பணியில் ஆசிரியர்களுக்கு பதட்டம், அவசரம் கூடாது'
ADDED : பிப் 10, 2024 11:26 PM
திருப்பூர்:' செய்முறைத் தேர்வுக்கு முன் பதட்டம், அவசரமாக பணி செய்ய கூடாது. தேர்வு பணியில் ஈடுபடுவோர் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,' என, முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 688 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 1ம் தேதி தேர்வு நடக்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் செய்முறை தேர்வுகள் துவங்குகிறது. கடந்த, 1ம் தேதி முதல் நடந்த வந்த திருப்புதல் தேர்வு, 8ம் தேதியுடன் நிறைவடைந்தது.முழுமையாக புத்தகங்களை படித்து முடித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுக்கு இன்னமும், இரு வாரங்கள் மட்டுமே இருப்பதால், படித்தவற்றை 'ரிவிஷன்' செய்து எழுதி பார்க்கும் பணியில் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளனர்.
பாட ஆசிரியர்கள், 'கடினமான பகுதியை இப்போதிருந்தே திரும்ப, திரும்ப படித்து, எழுதி பார்த்து விடுங்கள். கணித சூத்திரம், வரைபடம் (மேப்), படம் வரைந்து விளக்கம் எழுதும் பகுதியை ஒன்றுக்கு இரண்டு முறை மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்,' என அறிவுரை வழங்கியுள்ளனர்.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என வேட்கையுடன் இருப்பவர்கள், ஒரு நாளில் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்து தேர்வு தயாராகி வருகின்றனர்.
பணியில் கவனம்
செய்முறை தேர்வு நடத்துவது தொடர்பாக, ஆலோசனை கூட்டம், திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில், ''செய்முறை தேர்வுக்கு முன் ஆய்வகம் தயாராக வைப்பது, ஆசிரியருக்கு பணி, புற, அக மதிப்பீட்டாளர்கள் பணி குறித்து முன்கூட்டியே தலைமை ஆசிரியர் தெரிவித்திருக்க வேண்டும். தேர்வுக்கு முன் பதட்டம், அவசரமாக பணி செய்ய கூடாது. பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவ, மாணவியர் பாதுகாப்பாக, கவனமுடன் தேர்வுத்துறை சென்று திரும்புவது உறுதி செய்ய வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடுவோர் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

