ADDED : ஆக 21, 2026 04:12 PM
குடிமங்கலம்: சோமவாரப்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர்கள் குமார், மகேஸ்வரன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2006ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, பணிக்காலத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
பகுதி நேர மற்றும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து நியமன நாள் முதல், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குடிமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
