/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி வசூல் வேட்டை தடை விதித்த 'டெக்கிக்'
/
தீபாவளி வசூல் வேட்டை தடை விதித்த 'டெக்கிக்'
ADDED : அக் 12, 2025 11:24 PM
திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையத்திலுள்ள 'டெக்கிக்' வளாகத்தில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
தீபாவளி நெருங்கும் நிலையில், வசூல் ஆசாமிகளை நுழைவாயிலிலேயே திரும்பிப்போகச் செய்யும்வகையில், 'டெக்கிக்' நிர்வாகம், அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது.
'டெக்கிக்' தொழிற்கூடங்களில் நன்கொடை வசூலிக்க கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பனியன் நிறுவனங்கள் ஏராளம் உள்ளதால், பட்டாசு வெடிக்கவும் தடை செய்யப்பட்டு அறிவித்துள்ளது.
டெக்கிக் வளாகத்துக்குள் நுழையும் புதிய நபர்களிடம், செக்யூரிட்டிகள், எதற்காக செல்கின்றனர் என்கிற விவரங்களை கேட்டறிந்த பின்னரே, வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
'தீபாவளியை காரணம் காட்டி சிலர் வசூலில் ஈடுபடுவதை தடுக்கவும்; தீ விபத்து அபாயம் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக பட்டாசு வெடிப்பதை தடை செய்தும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது; பண்டிகைக்குப்பின் அறிவிப்பு பலகை அகற்றப்படும்' என்கின்றனர் டெக்கிக் நிர்வாகத்தினர்.