ADDED : பிப் 03, 2025 07:06 AM

அ நிறம் | அளவு
திருப்பூர், மங்கலம் ரோடு, ஜான்ஜோதி கார்டன், ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் 18-ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
நேற்று முன்தினம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று, விநாயகர் பூஜை, மகா கணபதி ேஹாமம், 108 சங்கு பூஜை நடந்தது. மகா அபிேஷகம் மற்றும் சங்காபிேஷகத்தை தொடர்ந்து, செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
