தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு


ADDED : மார் 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: சூரிய மற்றும் சந்திர கிரஹணம் ஏற்படும் காலங்களில், கோவில்களில் பூஜைகளை முன்கூட்டியே முடித்து, நடை அடைப்பது வழக்கம். அதன்படி, நேற்றைய சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, திருப்பூரிலுள்ள ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவில் உட்பட திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கோவில்களில், முன்கூட்டியே நடை சாத்தப்பட்டன.

அதிகாலை மற்றும் உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகு, நடைசாத்தப்பட்டன. உச்சிப்பூஜையும்,11:30 முதல், 12:30 மணிக்குள் முடித்து நடைசாத்தப்பட்டது. சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் நடைபெறவில்லை. இன்று அதிகாலை, சிறப்பு சாந்தி பூஜைகள் செய்து, கோபூஜையுடன் வழக்கமான பூஜைகள் நடைபெறுமென, சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் தெரிவித்துள்ளனர்.

திருமுருகன்பூண்டி திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழா நடந்து வருகிறது. வழக்கமாக, 2 நாள் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரஹணத்தை முன்னிட்டு,நேற்று முன்தினம் ஒரேநாளில், மூன்று தேர்களும் வடம் பிடித்து, ஒரே நாளில் நிலைசேர்க்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us