/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொளுத்தும் கோடை வெயில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை
/
கொளுத்தும் கோடை வெயில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை
கொளுத்தும் கோடை வெயில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை
கொளுத்தும் கோடை வெயில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை
ADDED : மார் 20, 2025 12:40 AM

திருப்பூர் : திருப்பூரில் வெயிலில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதால், சிக்னல்களில் தற்காலிக நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இன்னமும் தாக்கம் அதிகரிக்க உள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் சில நிமிடங்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த ஆண்டு போலவே பச்சை துணி கொண்ட மேற்கூரை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி, தெற்கு ரோட்டரி சார்பில், முதல்கட்டமாக திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு அருகே சிக்னலில் பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மாநகரில் உள்ள சிக்னல்களில் இதுபோன்று நிழற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.