/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டென்னிஸ் போட்டி; மாணவர்கள் அபாரம்
/
டென்னிஸ் போட்டி; மாணவர்கள் அபாரம்
ADDED : ஜூலை 25, 2025 11:31 PM
திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான டென்னிஸ் போட்டிகள், திருப்பூர் கிளப்பில் நடந்தது.
திருப்பூர் வடக்கு குறுமைய செயலர் இளங்கோவன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். மாணவிகளுக்கான, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், தலா, நான்கு பள்ளி அணிகள் பங்கேற்றன. அதே போன்று மாணவர் பிரிவிலும், தலா 4 அணிகள் பங்கேற்றன.
மாணவர், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், வி.கே.ஜி., பள்ளி அணி, ஸ்ரீசாய் பள்ளி அணியை வென்றது. இரட்டையர் பிரிவில், 14 மற்றும், 19 வயது பிரிவில், வி.கே.ஜி., பள்ளி அணி, ஸ்ரீசாய் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், வி.கே.ஜி., பள்ளி அணி, ஸ்ரீசாய் பள்ளி அணியை வென்றது.
மாணவியர் 14, 17 வயது ஒற்றையர் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாமிடம், ஜெய்வாபாய் பள்ளி அணி பெற்றது. 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி, ஸ்ரீசாய் பள்ளி அணியை வென்றது.
இரட்டையர் 14, வயது பிரிவில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. ஸ்ரீசாய் பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி முதலிடம். ஜெய்வாபாய் பள்ளி அணி இரண்டாமிடம். 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி, ஸ்ரீசாய் பள்ளி அணியை வென்றது.