/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
/
பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
ADDED : செப் 04, 2025 12:17 AM

திருப்பூர்; திருப்பூர் கருவம்பாளையம் டைமண்ட் லே-அவுட்டில் தரைத்தளத்தில் ஆனந்த் என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். முதல் தளத்தில் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அப்பகுதியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, முதல் தளத்தில் உள்ள மருந்து நிறுவனம், ஜென்ரேட்டரை இயக்கினர். காலை முதல் நீண்ட நேரமாக இயக்கப்பட்ட காரணத்தால், சூடாகி அதிலிருந்து நேற்று மாலை கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது, பனியன் நிறுவனத்தில் மளமளவென தீ பிடித்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் மீது பிடித்தது. தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை, ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் எரிந்து போனது. சென்டரல் போலீசார் விசாரிக்கின்றனர்.