/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓ.இ., மில்லில் பயங்கர தீ விபத்து
/
ஓ.இ., மில்லில் பயங்கர தீ விபத்து
ADDED : மே 04, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மங்கலம், அக்ரஹாரபுத்துாரை சேர்ந்தவர் பஷீர் அராபத், 32. அப்பகுதியில் கடந்த, 1.5 ஆண்டாக ஓ.இ., மில் நடத்தி வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேஸ்ட் துணியில் இருந்து கரும்புகை வெளியானது. தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் தீ பரவி எரிய ஆரம்பித்தது. மெஷின் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்தது. தகவலறிந்து சென்ற தெற்கு, பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

