ADDED : ஏப் 15, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சி, ரங்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 40.
கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் ஓ.இ., மில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென மெஷினில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. காங்கயம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் மெஷின், பஞ்சு கட்டடங்கள் என, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.