/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி குறைப்பு
/
ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி குறைப்பு
ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி குறைப்பு
ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி குறைப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:44 PM
சக்திவேல், ஒருங்கி ணைப்பாளர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்:
சமீபத்தில், அவிநாசி, தெக்கலுார், பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் நடந்தது. விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஓ.இ., மில் (ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்) உரிமையாளர்களிடையே இணக்கமான சூழல் உள்ளதால், பல்லடம் சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
நுால்கள் தேக்கமடைந்ததால், ஓ.இ., மில் உரிமையாளர்கள் அவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை ஈடு செய்யும் நோக்கில், தற்போது, நுால் விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறி, சில ஓ.இ., மில் உரிமையாளர்கள் நுால் சப்ளையை நிறுத்தியுள்ளனர்.
விசைத்தறி தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில், வேலை நிறுத்தம் காரணமாக, பெரும்பாலான ஆர்டர்கள் மேற்கு வங்கத்துக்கு சென்று விட்டது. ஓ.இ., மில் உரிமையாளர்களின் இந்த செயல்பாடு தொழிலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஓ.இ., மில் உரிமையாளர்களின் நடவடிக்கையால், இன்று முதல், ஜூலை, 5ம் தேதி வரை நாங்களும் உற்பத்தியை குறைக்க தீர்மானித்துள்ளோம்.