sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஏ.ஐ.,' தொழில்நுட்ப அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

/

'ஏ.ஐ.,' தொழில்நுட்ப அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

'ஏ.ஐ.,' தொழில்நுட்ப அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

'ஏ.ஐ.,' தொழில்நுட்ப அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 20, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், 'ஸ்டார்ட் அப்' மற்றும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை தொழில்களில் பயன்படுத்துவதற்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'ஸ்டார்ட் அப்' திட்டத்தில் தொழில் துவங்க வேண்டுமெனில், புதிய கண்டுபிடிப்புகளை தொழிலாக மாற்றுவதற்கான, 'இன்குபேஷன்' மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் அல்லது, 'இன்குபேஷன்' மையங்களின் செயல் திறனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இந்தியாவில், நிலையான அரசியல் சூழல் நிலவுவதால், பல்வேறு நாடுகள், நம் நாட்டில் தொழில்துவங்க மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. ஆர்வமாக வந்தாலும், இந்தியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' தொழில் துவங்க, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி, அனுமதி பெற வேண்டியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு என்பது, 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப ஆண்டு என, சர்வதேச அளவில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு தொழிலும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும். அதற்காக, வரும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் கட்டாயம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம், ஏ.ஐ., தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஏற்கனவே, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி திறன் வளர்க்கும் திட்டத்தில், 10 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தை வேகப்படுத்தும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். தொழில்துறையினர், இன்ஸ்டிடியூட்களுடன் இணைந்து, 'ஏ.ஐ.,' ஆய்வகங்களை அமைக்கவும், மத்திய அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

புதிய தொழில்முனைவோர்கள், 'ஸ்டார்ப் அப்' திட்டத்தில் முதலீடு செய்யவும், குறு, சிறு ஸ்டார்ட் அப்'கள் உருவாகும், கூடுதலான 'இன்குபேஷன்' மையங்கள் நிறுவ வேண்டும். பின்னலாடை தொழில்துறைக்கான புதிய பி.எல்.ஐ., திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

புதிய வர்த்தக கொள்கை வந்தால், கிராம அளவில் கூட, சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கடை திறக்க வாய்ப்புள்ளது. தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us