/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜவுளி தொழில்நுட்ப செய்முறை தேர்வு: சாயமிடும் அறையாக பள்ளி ஆய்வகம்
/
ஜவுளி தொழில்நுட்ப செய்முறை தேர்வு: சாயமிடும் அறையாக பள்ளி ஆய்வகம்
ஜவுளி தொழில்நுட்ப செய்முறை தேர்வு: சாயமிடும் அறையாக பள்ளி ஆய்வகம்
ஜவுளி தொழில்நுட்ப செய்முறை தேர்வு: சாயமிடும் அறையாக பள்ளி ஆய்வகம்
ADDED : பிப் 17, 2024 02:32 AM
திருப்பூர்;திருப்பூர் பள்ளியில் நேற்று நடந்த பிளஸ் 2 ஜவுளி தொழில்நுட்ப பாட செய்முறை தேர்வுக்காக, ஆய்வகம் சாயமிடும் அறையாக மாறியது.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட தமிழகத்தில் ஆறு பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜவுளி தொழில்நுட்பம் தனிபாடமாக உள்ளது. மாநிலம் முழுதும், 250 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளிக்கு, ஒரு ஆசிரியர் வீதம், ஆறு பேர் பணியாற்றுகின்றனர். நேற்று, திருப்பூர் பள்ளியில், ஜவுளி தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது. பிளஸ் 1ல், 34, பிளஸ் 2ல், 24 என மொத்தம், 58 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்காக, பள்ளி ஆய்வகம், துணிகளுக்கு சாயமிடும் அறையாக மாறியது. நுாலுக்கு சாயமிடுதல், துணிகளில் பிரின்டிங் செய்முறைகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஆறு பள்ளிகளில் மட்டும் பாடப்பிரிவு இருப்பதால், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு புறத்தேர்வாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வகையில், சேலம், வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஜவுளித் தொழில்பிரிவு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் புறத்தேர்வாளராக பணியாற்றினார்.