/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தை அமாவாசை வழிபாடு நிகும்புலா சிறப்பு யாகம்
/
தை அமாவாசை வழிபாடு நிகும்புலா சிறப்பு யாகம்
ADDED : ஜன 28, 2025 05:15 AM
பல்லடம் : பல்லடம் - வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வன பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் பிரத்தியங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், தை அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது.
இது குறித்து, அதர்வன பத்ரகாளி கோவில் பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணியகாலம்; ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம். உத்ராயண புண்ணிய காலத்தில்தான் அபிராமி பட்டருக்கு பாக்கியம் கிடைத்தது. இது, தேவர்களுக்கு உகந்த காலம். இந்த காலகட்டத்தில் வரும் தை அமாவாசை அன்று இறைவனை வழிபடுவது சிறந்தது.
இதுதவிர, பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசி பெறலாம். இறந்த நம் முன்னோர்கள் எங்கு இருப்பார்கள் என்பது அதர்வன பத்ரகாளிக்கு தான் தெரியும். இந்நாளில் அதர்வன பத்ரகாளியை வழிபடுவதன் மூலம் முன்னோர்கள் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். நவக்கிரகங்கள் பிடியிலிருந்து விடுபடலாம். தை அமாவாசையை முன்னிட்டு, கவலையை தீர்க்கும் காளிக்கு 'நிகும்பலா யாகம்' நடைபெற உள்ளது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். என்றார்.