/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தைப்பூச தேர்த்திருவிழா தற்காலிக கடைகள் ஏலம்
/
தைப்பூச தேர்த்திருவிழா தற்காலிக கடைகள் ஏலம்
ADDED : ஜன 20, 2025 11:37 PM
திருப்பூர்; சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி தற்காலிக கடைகளுக்கு இன்று ஏலம் விடப்படுகிறது.
காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் பிப்., 11ம் தேதி தைப்பூச தேர்த்திருவிழா நடக்கிறது.
இதையொட்டி, உரிய காலத்தில் மட்டும் தற்காலிகமாக கூடும் கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகள் ஆகியவற்றுக்கு ஆயம் வசூல் செய்யும் உரிமம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடக்கிறது. ஏலம் கோர விரும்புவோர், ஏலம் ஆரம்பிக்கும் முன்னரே முன்பணம் செலுத்த வேண்டும் அல்லது அதற்கு, இரு மடங்கு சொத்து மதிப்பு சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
வைப்புத் தொகை செலுத்தாதவர்கள் ஏலம் கோர அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் எடுத்தவர், மக்களிடமிருந்து புகார் ஏதும் வராமல் கட்டணம் வசூல் செய்து கொள்ள வேண்டும், என பி.டி.ஓ., அறிவித்துள்ளார்.