ADDED : டிச 09, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்து கூட்டுறவு ஓய்வுபெற்றோர் நலச் சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டுறவு பணியாளர்களுக்கு, கருணை ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், ஓய்வு பெற்ற கூட்டுறவு பணியாளர்கள், நேற்று சங்க உறுப்பினராக இணைந்தனர். புதிய மாவட்ட தலைவராக கவுதமன், செயலாளராக மாதேஸ்வரன், பொருளாளராக இந்திராகாந்தி ஆகியோர் தேர்வாயினர்.